புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 29-08-2019 | 6:02 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. முறிகள் மோசடி தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை 02. வட பகுதி காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதமாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 03. ஐ.தே.க. வேட்பாளரைத் தீர்மானித்த பின்னரே, கூட்டமைப்பு தொடர்பில் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு  04. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் - ஜனாதிபதி இடையே சந்திப்பு 05. கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்கள் விபத்திற்குள்ளானமை தொடர்பில் நால்வர் பணி இடைநீக்கம் 06. ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி 07. பாடசாலைகளில் தரமற்ற வகையில் நடாத்திச் செல்லப்படும் சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் நடவடிக்கை 08. பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு  வௌிநாட்டுச் செய்திகள் 01. கொலம்பியாவின் முன்னாள் சிமு (Chimu) பாரம்பரியத்தில் பயன்படுத்தப்பட்ட தளமொன்றிலிருந்து பலி கொடுக்கப்பட்ட 227 உடல்களின் எச்சங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெருவிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 02. ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் மத்திய அரசின் நடவடிக்கையின் அரசியலமைப்பு பெறுமதி எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. விளையாட்டுச் செய்திகள் 01. ஆட்ட நிர்ணயம், ஊழல், சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோதமாக பந்தயம் பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 02. இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சய தமது பந்துவீச்சு தொடர்பிலான பரிசோதனைக்காக இந்தியாவுக்கு சென்றுள்ளார்.