by Staff Writer 29-08-2019 | 8:04 PM
Colombo (News 1st) கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
சமகால பாதுகாப்பு சூழலில் இராணுவத்தின் தேர்ச்சி எனும் தொனிப்பொருளில் இம்முறை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.
சர்வதேச ரீதியில் நிலவும் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் ஆராயப்படுகிறது.
பாதுகாப்பு தொடர்பிலான கலந்துரையாடல்களுக்காக 13 வௌிநாட்டு நிபுணர்கள் 12 உள்நாட்டுப் பேச்சாளர்கள் உட்பட 800 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
ஹவாயின் பாதுகாப்பு கண்காணிப்பிற்கான ஆசிய மத்திய நிலையத்தின் பழைய மாணவரும் ஊடக நெறியாள்கையாளருமான மூலோபாய நடவடிக்கைகளுக்கான நிபுணரும் இராணுவ வரலாறு தொடர்பான ஆய்வுக்கட்டுரையாளருமான நித்தின் ஏ.கோஹ்லே மாநாட்டின் அங்குரார்ப்பண உரையை நிகழ்த்தினார்.