அமேசான்; தென் அமெரிக்க நாடுகள் கலந்துரையாடல்

அமேசான் காட்டுத்தீ; தென் அமெரிக்க நாடுகள் கலந்துரையாடல்

by Staff Writer 29-08-2019 | 10:00 AM
Colombo (News 1st) அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தென் அமெரிக்க நாடுகளின் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ தெரிவித்துள்ளார். தீயைக் கட்டுப்படுத்துதவற்காக G 7 நாடுகளால் 22 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என பிரெஞ்ச் ஜனாதிபதி அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த விடயத்தை மீண்டும் கருத்தில் கொள்ளுமாறு பிரேஸில் ஜனாதிபதிக்கு 9 மாநிலங்களின் ஆளுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தநிலையில், வெனிசூலா தவிர்ந்த அமேசான் பிராந்தியத்திலுள்ள ஏனைய அனைத்து நாடுகளும் பொதுவான கொள்கைக்காக எதிர்வரும் 6ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ குறிப்பிட்டுள்ளார். அமேசான் மழைக்காட்டில் கடந்த சில நாட்களாக தீ பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.