மக்களின் முறைப்பாடுகளை Online மூலம் பாராளுமன்றில் முன்வைக்கும் திட்டம்

மக்களின் முறைப்பாடுகளை Online மூலம் பாராளுமன்றில் முன்வைக்கும் திட்டம்

மக்களின் முறைப்பாடுகளை Online மூலம் பாராளுமன்றில் முன்வைக்கும் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2019 | 9:59 am

Colombo (News 1st) மக்களின் முறைப்பாடுகளை ஒன்லைன் (Online) மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

புதிய சட்ட ஒழுங்குக்கு அமைவாக பொதுமக்கள் Online மூலம் தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்துடன் பொதுமக்கள் நெருங்கி செயற்படுவதற்காகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பாராளுமன்ற செயற்குழுவை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததாக பிரதி சபாநாயகர் கூறியுள்ளார்.

Online மூலம் மக்கள் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இணையத்தள நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்தையும் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்