மகாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக ஷமீர் ரசூல்டீன் தெரிவு

மகாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக ஷமீர் ரசூல்டீன் தெரிவு

மகாராஜா நிறுவனத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக ஷமீர் ரசூல்டீன் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2019 | 6:55 pm

Colombo (News 1st) வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிறைவேற்று அதிகாரியாக A.F.ஜோன்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஷமீர் ரசூல்டீன் தெரிவு செய்யப்பட்டார்.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 42 ஆவது வருடாந்த மீளாய்வு மாநாடு இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் தற்போது நடைபெற்று

இதன்போது, கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிறைவேற்று அதிகாரியாக ஷமீர் ரசூல்டீன் தெரிவு செய்யப்பட்டார்.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 42 ஆவது வருடாந்த மீளாய்வு மாநாட்டின் பிரதம அதிதியாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க கலந்துகொண்டார்.

மதத் தலைவர்கள், அதிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பல நிறுவனங்கள் ஊடாக பல்வேறு துறைகளில் இலங்கை மக்களுக்காக சேவையாற்றிய நிறைவேற்று அதிகாரிகளை கௌரவிப்பதற்காக வருடாந்தம் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 5 நிறைவேற்று அதிகாரிகள் இம்முறையும் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

01. இன்டர்நெஷனல் கொஸ்மெட்டிக் பிரைவட் லிமிட்டட்டின் சேதிகா ராஜபக்ஸ
02. S-lon Lanka-வின் சனத் சமிந்த பண்டார
03. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மலிந்த ரோட்ரிகோ
04. நியூஸ்ஃபெஸ்ட்டின் ஆர்.கோகுல்நாத்
05. கெவில்டனின் மிஹிர பண்டார

ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

2018 – 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிறைவேற்று அதிகாரியை தெரிவு செய்வதற்காக ஐவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

01. நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தி பணிப்பாளர் கயான் சம்பத்
02. S-lon Lanka நிறுவனத்தின் இந்திக்க கீகியனகே
03. கெவில்டன் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரதம நிறைவேற்று அதிகாரி நலீன் ஜெயவர்தன
04. AF ஜோன்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஷமீர் ரசூல்டீன்
05. மனிதவள பிரிவின் பொது முகாமையாளர் ரவி கமகே

ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் வருடத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக AF ஜோன்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஷமீர் ரசூல்டீன் தெரிவு செய்யப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்