போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வௌ்ளவத்தையில் கைது

போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வௌ்ளவத்தையில் கைது

போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வௌ்ளவத்தையில் கைது

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2019 | 4:53 pm

Colombo (News 1st) ஐஸ் மற்றும் ஹஹிஷ் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வௌ்ளவத்தை – ருத்ரா மாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குறத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழங்கிய தகவலையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோ 36 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு கிலோ 6 கிராம் ஹஹிஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மோதர பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்