நல்லூர் இரதோற்சவப் பெருவிழா இன்று

நல்லூர் இரதோற்சவப் பெருவிழா இன்று

நல்லூர் இரதோற்சவப் பெருவிழா இன்று

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2019 | 7:32 am

Colombo (News 1st) வரலாற்றுப் பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப் பெருமானின் இரதோற்சவம் இன்று (29) நடைபெறுகின்றது.

நல்லூர் கந்தன் தேரேறி திருவீதி வலம் வரும் அழகைக் காண்பதற்காய், இலட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தில் கூடியுள்ளனர்.

அதிகாலையிலே பூசைகள், அபிஷேகங்கள், வசந்தமண்டபப் பூசை ஆகியன காலக் கிரமமாக முருகப்பெருமானுக்கு நடைபெற்றன.

ஆலயத்தின் அசையா மணிகள் ஆறும் ஒருங்கே ஒலிக்க முருகப்பெருமன் தேரேறி வீதியுலா வருதற்குப் புறப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்