கென்டர்பரி பேராயர் இலங்கை வருகை: கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்திற்கு விஜயம்

கென்டர்பரி பேராயர் இலங்கை வருகை: கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்திற்கு விஜயம்

கென்டர்பரி பேராயர் இலங்கை வருகை: கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்திற்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2019 | 8:42 pm

Colombo (News 1st) கென்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி (Justin Welby) இன்று முற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

கென்டர்பெரி பேராயருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை திருச்சபையின் கொழும்பு மறைமாவட்ட ஆயர் திலோராஜ் கனகசபை மற்றும் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர்
கென்டர்பெரி பேராயரை வரவேற்றனர்.

தனது விஜயத்தின் முதற்கட்டமாக நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்திற்கு பேராயர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் கலந்து கொண்டிருந்தார்.

தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கென்டர்பரி பேராயர் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான விசேட பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டார்.

அதன் பின்னர் கொழும்பு சின்னமன் ஹோட்டலுக்கு விஜயம் செய்த கென்டர்பரி பேராயர் ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்.

அலரி மாளிகைக்கு விஜயம் செய்த பேராயர், அங்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்தித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்