அமேசான் காட்டுத்தீ; தென் அமெரிக்க நாடுகள் கலந்துரையாடல்

அமேசான் காட்டுத்தீ; தென் அமெரிக்க நாடுகள் கலந்துரையாடல்

அமேசான் காட்டுத்தீ; தென் அமெரிக்க நாடுகள் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2019 | 10:00 am

Colombo (News 1st) அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தென் அமெரிக்க நாடுகளின் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ தெரிவித்துள்ளார்.

தீயைக் கட்டுப்படுத்துதவற்காக G 7 நாடுகளால் 22 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என பிரெஞ்ச் ஜனாதிபதி அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விடயத்தை மீண்டும் கருத்தில் கொள்ளுமாறு பிரேஸில் ஜனாதிபதிக்கு 9 மாநிலங்களின் ஆளுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், வெனிசூலா தவிர்ந்த அமேசான் பிராந்தியத்திலுள்ள ஏனைய அனைத்து நாடுகளும் பொதுவான கொள்கைக்காக எதிர்வரும் 6ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ குறிப்பிட்டுள்ளார்.

அமேசான் மழைக்காட்டில் கடந்த சில நாட்களாக தீ பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்