ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: நால்வர் இடைநீக்கம்

ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: நால்வர் பணி இடைநீக்கம்

by Staff Writer 28-08-2019 | 4:06 PM
Colombo (News 1st) கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் இரண்டு ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானமை தொடர்பில் நால்வர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். மருதானையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த ரயிலின் சாரதி, சாரதி உதவியாளர், கட்டுப்பாட்டாளர் மற்றும் புத்தளம் நோக்கி பயணித்த ரயிலின் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் கூறினார். மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த ரயில் சமிக்ஞையின்றி பயணித்துள்ளமை இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த ரயிலும் மருதானையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த ரயிலும் இன்று முற்பகல் 10 மணியளவில் மோதி விபத்திற்குள்ளாகின. எவ்வாறாயினும், ரயில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்