கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீது விசாரணை

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய இருவரையும் தடுத்துவைத்து விசாரிக்க நடவடிக்கை

by Staff Writer 28-08-2019 | 11:32 AM
Colombo (News 1st) அம்பாறை பகுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேகநபர்கள் இருவரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ மில்லது இப்ராஹிம் அமைப்புடன் தொடர்புடைய இருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டிருந்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரச புலனாய்வு சேவை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். அபு அனாஸ் என அழைக்கப்படும் மொஹமட் ரய்சுத்தியன் அப்துல் ரஹ்மான் மற்றும் அபுராவா என அழைக்கப்படும் செய்னுல் ஆப்தீன் ஹஸ்ல ஆகிய இருவரே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேகநபர்கள் இருவரும் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டையில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.