செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 28-08-2019 | 6:12 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. INTERPOL எனப்படும் சர்வதேச பொலிஸால் ஜனாதிபதிக்கு விசேட விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. 02. கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டமை தொடர்பில் விளக்கம் கோரி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களான அஜித் பி. பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 03. பிரதமரின் செயலாளர், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார். 04. திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் சின்னக்கலுவான் பாலத்தின் கீழிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 05. வசீம் தாஜூதீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொழும்பின் முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 06. கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படும் CCTV கெமரா கட்டமைப்பு மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது. 07. யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்கும் எதிர்வரும் வியாழக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 08. பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு இந்திய தனியார் நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. அமேசான் காடுகளைப் பாதுகாக்க ஹொலிவூட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ 5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார். 02. அமேசான் மழைக் காடுகளில் பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்த G 7 நாடுகள் வழங்கவிருந்த உதவித் தொகையை நிராகரிக்கவுள்ளதாக பிரேஸில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரத்ன, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தர வரிசையில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 02. ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கு வாழ்நாள் போட்டித் தடை விதிப்பதற்கு, சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. 03. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக நடத்தப்பட்ட கணக்காய்வின் மூலம், போட்டி ஒளிபரப்பு உரிமையை வழங்குவது தொடர்பாக பாரிய சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.