பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2019 | 9:00 am

Colombo (News 1st) பாடசாலைகளில் தரமற்ற வகையில் நடாத்திச் செல்லப்படும் சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த, ஆய்வின்போது போஷாக்கு தொடர்பில் மாணவர்கள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த எடை மற்றும் இருதய நோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலை நடாத்தப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து சுற்றுநிருபம் ஒன்றை வௌியிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்