பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2019 | 7:05 am

Colombo (News 1st) பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

தமது சம்பள உயர்வு கோரிக்கைக்கு அமைச்சினால் தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் எந்தவிதத் தீர்வும் எட்டப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் தம்மிக எஸ் பிரியந்த தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்​னே நியூஸ்பெஸ்ட்டுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இவர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு காணும் வரையில் திறைசேரியில் இருந்து மேலதிகக் கொடுப்பனவை வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொடுப்பனவு விடயத்தை ஏற்றுக்கொள்வதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்கம் தமக்கு ஏதும் தெரிவிக்கவில்லை எனவும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்​னே மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்