by Staff Writer 28-08-2019 | 1:52 PM
Colombo (News 1st) பத்திக் லங்கா தேசிய கண்காட்சி நாளை (29) மற்றும் நாளை மறுதினங்களில் (30) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
ஆரம்பக் கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் நாடளாவிய ரீதியிலுள்ள பத்திக் கைத்தொழிலாளர்கள் 60 பேர் தமது உற்பத்திகளைக் காட்சிப்படுத்தவுள்ளனர்.
பத்திக் கைத்தொழிலை மீண்டும் மேம்படுத்தல், அவர்களின் உற்பத்திகளுக்கு உலக சந்தையில் உயர் விலையை நிர்ணயித்தல், இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.