நல்லூரில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட கலையகம் அங்குரார்ப்பணம்

நல்லூரில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட கலையகம் அங்குரார்ப்பணம்

நல்லூரில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட கலையகம் அங்குரார்ப்பணம்

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2019 | 2:15 pm

Colombo (News 1st) யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நியூஸ்பெஸ்ட்டின் விசேட கலையகம் இன்று (28) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இலக்கம் – 676, பருத்தித்துறை வீதி, நல்லூர் என்ற முகவரியில் இந்த விசேட கலையகம் அமைந்துள்ளது.

ஊடகத்துறையில் தடம் பதிக்கும் ஆர்வத்துடன் உள்ள ஆற்றல்சார் இளைஞர், யுவதிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட கலையகம் இந்த வருடமும் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு நியூஸ்பெஸ்ட்டின் விசேட கலையகம் யாழ். நல்லூரிலிருந்து இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்