கோட்டை – மருதானை இடையே ரயில்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து

கோட்டை – மருதானை இடையே ரயில்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து

கோட்டை – மருதானை இடையே ரயில்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2019 | 11:00 am

Colombo (News 1st) கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் 2 ரயில்கள் ஒன்றுடனொன்று மோதியுள்ளன.

கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கிய பயணித்த ரயிலும் மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயிலும் இன்று முற்பகல் 10 மணியளவில் மோதுண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ரயில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ரயில்கள் மோதுண்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்