தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு: இருவர் கைது

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய இருவர் கைது

by Staff Writer 27-08-2019 | 3:55 PM
Colombo (News 1st) தடை செய்யப்பட்டுள்ள ஜமாத்தே மில்லது இப்ராஹிம் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புகளுடன் தொடர்புடைய இருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சந்தேகநபர்கள் இருவரும் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டையில் ஆயுதப்பயிற்சி பெற்றவர்கள் எனவும் அவர் கூறினார்.