ஹொங்கொங் வீரர்கள் இருவருக்கு வாழ்நாள் போட்டித் தடை

ஹொங்கொங் வீரர்கள் இருவருக்கு வாழ்நாள் போட்டித் தடை

ஹொங்கொங் வீரர்கள் இருவருக்கு வாழ்நாள் போட்டித் தடை

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2019 | 9:11 am

Colombo (News 1st) ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கு வாழ்நாள் போட்டித் தடை விதிப்பதற்கு, சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் ஒழிப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டிலேயே, இவ்வாறு வாழ்நாள் போட்டித்தடை விதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இர்பான் அஹமட் மற்றும் நதீம் அஹமட் ஆகியோருக்கே இவ்வாறு தடை விதிக்கப்படுகின்றது.

இதனைத் தவிர, ஹொங்கொங் அணியின் மற்றுமொரு வீரர் ஹஸீப் அம்ஜாட்டுக்கு 5 வருடகால போட்டித்தடையை விதிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

2 வருடங்களுக்குள் ஆட்ட நிர்ணயம், ஆட்ட நிர்ணயத்திற்குத் திட்டமிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்