வைக்கோலை சேமிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

வைக்கோலை சேமிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

வைக்கோலை சேமிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2019 | 9:19 am

Colombo (News 1st) வயல்வெளிகளில் காணப்படும் வைக்கோலுக்குத் தீ வைக்காது, கால்நடைகளுக்குரிய உணவாக சேமிப்பதற்கு உதவுமாறு மூதூர் பிரதேச கால்நடை உரிமையாளர்கள், விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த வருடம் சிறுபோக விவசாய செய்கைக்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்களில் விவசாய நெற்செய்கை செய்யப்பட்டன.

சம்மாந்துறை, ஒட்டுப்புல்வெட்டை, பெரும்பத்து, பச்சங்குளம் மற்றும் எரிக்கிலங்காட்டையை அண்மித்த வயல்நிலங்கள் அறுவடை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே, மூதூர் கமநல சேவைகள் நிலையத்திற்கு உட்பட்ட வயல்வெளிகளில் காணப்படும் வைக்கோலுக்கு தீ வைக்காது கால்நடைகளுக்குரிய உணவாக சேமிக்க உதவுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்