வசீம் தாஜூடீன் கொலை வழக்கு: பேராசிரியர் ஆனந்த சமரசேகரவிற்கு பிணை

வசீம் தாஜூடீன் கொலை வழக்கு: பேராசிரியர் ஆனந்த சமரசேகரவிற்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2019 | 4:09 pm

Colombo (News 1st) வசீம் தாஜூடீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொழும்பின் முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பின் முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி, பேராசிரியர் ஆனந்த சமரசேகரவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மஞ்சுள திலகரட்ண முன்னிலையில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ரக்பி வீரர் வசீம் தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக அவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் பின்னர் அவரை 25,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்