மூதூரில் பாலத்தின் கீழ் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

மூதூரில் பாலத்தின் கீழ் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2019 | 5:57 pm

Colombo (News 1st) திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் சின்னக்கலுவான் பாலத்தின் கீழிருந்து சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 1.30 அளவில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பாலத்தின் கீழ் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் அரச புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய இரகசியத் தகவல்களுக்கு அமைய, மூதூர் பொலிஸாரினால் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, 2 கைக்குண்டுகள், 15 T56 ரக துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வெடிபொருட்கள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்