மிஸ் இந்தியாவாக கீர்த்தி சுரேஷ்

மிஸ் இந்தியாவாக கீர்த்தி சுரேஷ்

மிஸ் இந்தியாவாக கீர்த்தி சுரேஷ்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

27 Aug, 2019 | 3:36 pm

தேசிய விருதைத் தன்வசப்படுத்திய கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் பெயர் மட்டுமின்றி, அதற்கான டீசர் காட்சி ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

நரேந்திர நாத் இயக்கும் இந்தத் திரைப்படத்திற்கு தமன் எஸ். இசையமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மிஸ் இந்தியா திரைப்படத்தை எதிர்வரும் ஒக்டோபரில் வௌியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் நரேந்திர நாத் தெரிவித்துள்ளார்.

இது கீர்த்தி சுரேஷின் 20ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கீர்த்தி சுரேஷின் நடிப்பில் கடந்த வருடம் வௌியாகிய ‘தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்