பசறை பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை

பசறை பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2019 | 7:49 pm

Colombo (News 1st) மலையக மக்கள் முன்னணியின் பசறை பிரதேச சபை உறுப்பினர் கண்மணி சிவநேசன் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரம் வெட்டுவதற்கு இடையூறு செய்வதாகத் தெரிவித்து புலத் ராஜா என்ற நபர் தன்னைத் தாக்கியதாக பசறை பிரதேச சபை உறுப்பினர் கண்மணி சிவநேசன் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்