ஜனாதிபதிக்கு INTERPOL-இன் விசேட விருது

ஜனாதிபதிக்கு INTERPOL-இன் விசேட விருது

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2019 | 4:59 pm

Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு INTERPOL எனப்படும் சர்வதேச பொலிஸின் பொதுச்செயலாளர் Jürgen Stock விசேட விருது வழங்கி கெளரவித்துள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை துரிதமாகக் கைது செய்தமை உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள INTERPOL-இன் பொதுச்செயலாளர் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இலங்கை பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நிபுணத்துவத்துடன் செயற்படுவதாக இதன்போது Jürgen Stock தெரிவித்துள்ளார்.

போதைப்பொருட்களை கண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பக் கருவிகளை பெற்றுக்கொள்ளல், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்குத் தேவையான தௌிவூட்டல்களை வழங்குதல் தொடர்பில் எதிர்காலத்தில் உடன்படிக்கையொன்றுக்கு வருவது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்