சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன இடையிலான பேச்சுவார்த்தை நிறைவு

சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன இடையிலான பேச்சுவார்த்தை நிறைவு

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2019 | 2:01 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (27) முற்பகல் நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து கட்சித் தலைவர்கள் இருவருக்கும் தௌிவுபடுத்தவுள்ளதாக பொதுஜன பெரமுன சார்பில் கட்சியின் தேசிய ஏற்பாட்டாளர் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவன்ன மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்து கொண்டாதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன சார்பில் கட்சியின் தேசிய ஏற்பாட்டாளர் பசில் ராஜபக்ஸ மற்றும் பேராசிரியர் G.L. பீரிஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடல் தொடர்பில் முழுமையாக செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த வேளையில், மஹிந்த அமரவீர ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பின் எதிர்பார்ப்பு தொடர்பில் சில விடங்களை முன்வைத்தார்.

இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்ற போது , பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலவைர் அலுவலகத்திற்கு வந்து செல்வதை கண்டுகொள்ள முடிந்தது.

கலந்துரையாடலின் பின்னரே கட்சியின் உறுப்பினர்கள் ஊடங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்