அமேசான் தீயைக் கட்டுப்படுத்த G7 நாடுகள் நிதியுதவி

அமேசான் தீயைக் கட்டுப்படுத்த G7 நாடுகள் நிதியுதவி

அமேசான் தீயைக் கட்டுப்படுத்த G7 நாடுகள் நிதியுதவி

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2019 | 10:11 am

Colombo (News 1st) அமேசான் மழைக்காடுகளில் பரவும் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நிதியுதவியை வழங்குவதற்கு G7 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

இதற்காக, G 7 நாடுகள் இணைந்து 22 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளதாக பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் பியரிட்ஸ் நகரில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேற்றைய தினம் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போதே குறித்த நிதியுதவி தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியினூடாக, தீயை கட்டுப்படுத்துவதற்கு விமானங்களை பெற்றுக்கொள்ள முடியும் என பிரான்ஸ் ஜனாதிபதி கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்