அமேசான் காடுகளை பாதுகாக்க லியோனார்டோ டி காப்ரியோ 5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி

அமேசான் காடுகளை பாதுகாக்க லியோனார்டோ டி காப்ரியோ 5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி

அமேசான் காடுகளை பாதுகாக்க லியோனார்டோ டி காப்ரியோ 5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி

எழுத்தாளர் Bella Dalima

27 Aug, 2019 | 4:48 pm

அமேசான் காடுகளை பாதுகாக்க ஹொலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ 5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகள், உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்கின்றது.

இந்நிலையில், அமேசான் காட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக காட்டுத்தீ பரவியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ காடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகின்றன. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அண்மையில் ஹொலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ, உலக அளவில் ஊடகங்கள் அமேசான் காட்டுத்தீ குறித்து பெரிதாக பேசவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமேசான் காடுகளைப் பாதுகாக்க காப்ரியோ தலைமையில் Earth Alliance எனும் அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம் தற்போது அமேசான் காடுகளைக் காக்க நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக அமேசான் காடுகளைக் காக்க, காப்ரியோ 5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்