G 7 மாநாட்டில் ஈரானிய வௌிவிவகார அமைச்சர்

G 7 மாநாட்டில் முன்னறிவிப்பின்றி கலந்துகொண்ட ஈரானிய வௌிவிவகார அமைச்சர்

by Staff Writer 26-08-2019 | 5:00 PM
Colombo (News 1st) பிரான்ஸில் இடம்பெற்ற G 7 மாநாட்டில், முன்னறிவிப்பு ஏதுமின்றி ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் கலந்துகொண்ட இம் மாநாடு பியரிட்ஸில் நடைபெற்றது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், மாநாட்டில் ஈரானிய அமைச்சர் கலந்துகொண்டிருப்பது, அமெரிக்க அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. பிரெஞ்ச் ஜனாதிபதியுடன் இதன்போது ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாட் ஸரீப் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 2015 ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த வருடம் அமெரிக்கா விலகியதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.