பஹத்கம துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

பஹத்கம துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2019 | 2:25 pm

Colombo (News 1st) ஹங்வெல்ல – பஹத்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு 10 மணியளவில் முகத்தை மூடிய தலைக்கவசம் அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், வீட்டிலிருந்த இருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயங்களுக்குள்ளான 43 வயதான வீட்டின் உரிமையாளர் மற்றும் 32 வயதான மற்றுமொருவரும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்