களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2019 | 4:11 pm

Colombo (News 1st) களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (26) நள்ளிரவு வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களுத்துறை கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மின் விநியோகிக்கும் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர்விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, பயாகல, பிலமினாவத்த, போம்புவள, மங்கொன, பேருவளை, களுவாமோதர, மொரகல்ல, அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்