அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் பேச்சு மீண்டும் ஆரம்பம்

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் பேச்சு மீண்டும் ஆரம்பம்

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் பேச்சு மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2019 | 7:29 pm

Colombo (News 1st) அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மிகவிரைவில் மீள ஆரம்பிக்கப்படும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மோதல்கள் வலுப்பெற்றிருந்த நிலையிலேயே, அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

நேற்றைய தினம் சீனா தம்மைத் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க அழைப்பு விடுத்தாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆகவே, தாம் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்புத் தொடர்பில் சீனாவிடமிருந்து எந்தப் பதிலும் இதுவரை வௌியாகவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்