வழக்கை வாபஸ் பெறுவதற்குத் தயார் என பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவிப்பு

by Staff Writer 25-08-2019 | 9:18 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் குவிக்கப்பட்டுள்ள கழிவுப் பொருட்களை நாட்டிலிருந்து வௌியேற்றுவதற்குத் தாம் தாக்கல் செய்த வழக்குத் தடையாக அமையும் என்றால் அதனை வாபஸ் பெறுவதற்குத் தயாராக இருப்பதாக பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை நீதிமன்றத்தின் அனுமதியின்றி மீள் ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் வகையில் கடந்த 31ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது. சுற்றாடல் நீதி அமைப்பு மேன்டுறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்ததுடன், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்தது. பிரதிவாதிகளுக்கு செப்டம்பர் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் இதன்போது அறிவித்தல் விடுக்கப்பட்டது. ஹேலீஸ் பிரீ சோன் லிமிடெட், E.T.L. Colombo Pvt. Ltd., இலங்கை முதலீட்டு சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, சுங்க பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அதனை நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லுமாறு நாம் அவர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் எனினும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று நீதிமன்றம் சென்றுள்ளதாகவும் அந்த வழக்கு முடிவடைந்ததும், அதனை கப்பலில் ஏற்ற அந்த நிறுவனம் தம்முடன் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் இசுரு தேவப்பிரிய கடந்த 19 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
அந்த 2, 3 நிறுவனங்களும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும். அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். இந்தக் கழிவுப் பொருட்கள் மீண்டும் இங்கிலாந்திற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். இந்த 3 நிறுவனங்களுக்கும் எதிராக பொலிஸ் தலைமையத்தில் நாம் முறைப்பாடு செய்தோம். எனினும் அது தொடர்பிலான விசாரணைகளுக்கான பொலிஸ் தலைமையகம் எம்முடன் ஆக்குறைந்தது தொலைபேசியில் கூட பேசவில்லை. அந்த நிறுவனங்களின ஆதிக்கம் இலங்கை பொலிஸையும் ஆட்டிப் படைக்கின்றது. வழக்கு விசாரணை காரணமாக இந்தக் கழிவுகளை இங்கிலாந்திற்கு திருப்பியனுப்ப முடியாவிட்டால், சுற்றாடல் அமைப்புடன் கலந்துரையாடி வழக்கை வாபஸ் பெற்று அதற்காக சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்போம். எனினும் அர்கள் சுற்றாடல் அமைப்புக்களை ஏமாற்றி, தமது வியாபாரத்தை முன்னெடுக்க முற்பட்டால் அதற்கு எதிராக நாம் நடவடிக்கை தயாராகவுள்ளதாக சுற்றாடலைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் பாஹியங்கல ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மோசடியான முறையில் இலங்கைக்கு கழிவுகளைக் கொண்டுவரும் இந்த வியாபாரம், திட்டமிட்டு மேற்கொள்ளப்படவுதாக பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். அதேநேரம், கடல் மார்க்கமாகப் பயணிக்கும் கப்பல்கள் ஊடாக கழிவுப் பொருட்கள் மற்றும் அசுத்தமான நீர் கடலில் கலப்பதை தடுப்பதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக, நாட்டின் கடல் எல்லையைக் கண்காணிப்பதற்கு வசதிகள் இல்லாமை இதற்கான காரணமாகும். சில கப்பல்கள் கடலில் கழிவுப் பொருட்களை கொட்டுவதாக தகவல்கள் கிடைத்துள்ள போதிலும், அதனை அடையாளம் காணும் தொழில்நுட்பம் இதுவரை இல்லாமை, பாரிய பிரச்சினையாகவுள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சமுத்திர மாசடைதலில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருப்பததாக 2015ஆம் ஆண்டு சர்வதேச சஞ்சிகை ஒன்றின் ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது மிகவும் மோசமான நிலமையாகும். இரவு நேரத்திலும் கழிவுகளைக் கடலில் கொட்டுவதால் எந்தக் கப்பல் மூலம் கழிவுப் பொருட்கள் கொட்டபடுகிறது என்பதனை காண்பது கடினமானது. செய்மதி தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் தொடர்பில் நாம் கலந்துரையாடுகின்றோம். ஒரு நாளைக்கு 350 தொடக்கும் 400 கப்பல்கள் பயணிக்கின்றன. எனவே இதற்கு சிறந் தீர்வு செய்மதி தொழில்நுட்பமாகும் என
சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், கலாநிதி டேர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். சுழியோடுகளைப் பயன்படுத்தி சமுத்திரத்தைப் பார்க்கும்போது கடல் அதிகளவில் மாசடைந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருடகள் தொன் கணக்கில் காணப்படுகின்றன. மீன்களுக்குப் பாதகமான கழிவுப் பொருட்களே இவ்வாறு கொட்டப்படுகின்றன. கப்பல்கள் மூலம் கழிவுப் பொருட்கள் கடலில் கொட்டப்படுவதாக தமக்கு அறியக்கிடைப்பதாக சூழலியலாளரான துசித ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையை அண்மித்த சமுத்திரங்களில் கொட்டப்படும் கழிவுப் பொருட்களும் இலங்கை கடல் எல்லையை அடைவதாக சமுத்திரவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்துமா சமுத்திரத்தின் வடக்குப் பகுதியில் இலங்கை அமைந்துள்ளது. ஆகவே, மேற்கிலிருந்து கிழக்கிற்கும் கிழக்கிலிருந்து மேற்கிற்கும் அலைகள் செல்கின்றன. குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் என்பன இந்தோனேஷியா, மெலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வீசப்படுகின்ற கழிவுகள் இந்துமா சமுத்திரத்தில் சேர்கின்றதாக மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரித்த பட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்