மன்னாரில் 983 கிராம் போதைப்பொருள் கைப்பற்றல்

மன்னாரில் கொக்கைன் என சந்தேகிக்கப்படும் 983 கிராம் போதைப்பொருள் கைப்பற்றல்

by Staff Writer 24-08-2019 | 10:12 PM
Colombo (News 1st) மன்னார் - வங்காலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கொக்கைன் என சந்தேகிக்கப்படும் 983 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினரும் மன்னார் பிராந்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இன்று அதிகாலை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. வங்காலை கடற்கரையிலுள்ள மீன்வாடி ஒன்றிலிருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மேலதிக விசாரணைகளுக்காக வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.