மக்கள் சக்தி: முறைப்பாட்டுப் பெட்டகத்தில்  குறை நிறைகளை பதிவு செய்த மக்கள்

மக்கள் சக்தி: முறைப்பாட்டுப் பெட்டகத்தில்  குறை நிறைகளை பதிவு செய்த மக்கள்

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2019 | 8:18 pm

Colombo (News 1st) நாட்டின் வரைபடத்தில் மறைக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, குரலற்ற மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் செயற்பாட்டை நியூஸ்ஃபெஸ்ட் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.

மக்கள் சக்தி மக்கள் மன்றத்தினூடாக நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் இன்றும் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மக்கள் பிரச்சினைகளை வௌிச்சத்திற்கு கொண்டு வந்தனர்.

பதுளையின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்த குழுவினர் இன்று முற்பகல் பிபில நகருக்கு பயணித்தனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் சக்தி திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட பணிகளை இதன்போது மக்கள் உவகைப் பெருக்குடன் செய்நன்றியுடன் நினைவுகூர்ந்தனர்.

மக்கள் சக்தி முறைப்பாட்டுப் பெட்டகத்தில் இன்றும் தமது குறை நிறைகளை பெருந்திரளான மக்கள் விருப்புடன் பதிவு செய்தனர்.

பேராதனை பல்கலைக்கழகத்துடன் மக்கள் சக்தி இணைந்து முன்னெடுத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் மூலம் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளில் முக்கியத்துவம் வாய்ந்த 8 பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணும் எமது முயற்சியில் மக்கள் இன்று இணைந்துகொண்டனர்.

அதனை அடுத்து மக்களின் பிரச்சினைகளைக் கண்டறியும் நோக்கில் லுணுகலை பகுதிக்கு சென்ற குழுவினருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது மக்கள் சக்தி V-Force படையணியில் பலரும் தம்மை பதிவு செய்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்