காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2019 | 4:09 pm

Colombo (News 1st) காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இலக்கம் 124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று காலை யாழ்ப்பாணத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தின் மேலும் இரண்டு பிராந்திய அலுவலகங்கள் மன்னார் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஏற்கனவே செயற்படுகின்றன.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் பிராந்திய அலுவலகம் திறக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்