by Staff Writer 24-08-2019 | 4:18 PM
Colombo (News 1st) இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரிய கல்வி சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவை ஆகிய மூன்று பிரிவுகளையும் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு ஓய்வு வழங்குவது தொடர்பான அதிகாரம் பொதுச்சேவை ஆணைக்குழுவிடமிருந்து கல்வி அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கமைய, பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் கல்வி அமைச்சு இதற்கான கோரிக்கையை முன்வைத்தது.
அதற்கமைய, ஒழுக்காற்று பிரச்சினைகள் தவிர்ந்த சாதாரண முறையில் குறிக்கப்பட்ட தினத்தில் ஓய்வு பெறுவதற்கான அனுமதியை தமது அமைச்சினூடாக வழங்க முடியுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.