ஈட்டி எறிதலில் பிரகாசிக்கக் காத்திருக்கும் மலையக நட்சத்திரம்

ஈட்டி எறிதலில் பிரகாசிக்கக் காத்திருக்கும் மலையக நட்சத்திரம்

ஈட்டி எறிதலில் பிரகாசிக்கக் காத்திருக்கும் மலையக நட்சத்திரம்

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2019 | 7:08 pm

Colombo (News 1st) ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை படைக்கும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஒருவரே தலவாக்கலை – கிளன்மோர் தோட்டத்தைச் சேர்ந்த சபாபதி திலகராஜ்.

அண்மையில் நடைபெற்ற 31 ஆவது தேசிய இளைஞர் சேவைகள் விளையாட்டு விழாவில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

2011 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய திலகராஜ் , குடும்ப சுமை காரணமாக ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் கற்று தற்போது ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

உரிய பயிற்றுநர் , பயிற்சிக்கான இடம் என்பன இல்லாமல் தனது தந்தையின் விவசாய தோட்டத்தில் பயிற்சி பெற்று வரும் திலகராஜ் தேசிய அரங்கில் பிரகாசிக்கும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்