அருவக்காட்டிற்கு குப்பையுடன் சென்ற லொறி மீது கல் வீச்சு

அருவக்காட்டிற்கு குப்பையுடன் சென்ற லொறி மீது கல் வீச்சு

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2019 | 8:42 pm

Colombo (News 1st) அருவக்காடு கழிவகற்றல் பிரிவிற்கு குப்பைகளை கொண்டு சென்ற லொறி ஒன்றின் மீது புத்தளம் – தில்லையடி பகுதியில் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

குப்பைகளை கொண்டு சென்ற லொறி மாத்திரமின்றி பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸ் வாகனத்திற்கும் சேதமேற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்