2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்ய இன்று முதல் சந்தர்ப்பம்

2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்ய இன்று முதல் சந்தர்ப்பம்

2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்ய இன்று முதல் சந்தர்ப்பம்

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2019 | 4:38 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் பெயர்களை உள்ளடக்காதவர்கள் தமது பெயர்களை பதிவு செய்ய இன்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 வாக்காளர் இடாப்பின் பிரதி இன்று முதல் அடுத்த மாதம் 19 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படவுள்ளதாக
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

கிராம சேவையாளர் காரியாலயம், மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்