சஜித் பிரேமதாசவிற்கு மாத்தறையில் அமோக வரவேற்பு

by Staff Writer 23-08-2019 | 4:21 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்பதற்காக இன்று மாத்தறையில் மாபெரும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் கலந்துகொள்வதற்காக சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வ மதத் தலைவர்களிடம் அவர் ஆசி பெற்றுக்கொண்டதன் பின்னர் பேரணி ஆரம்பமானது. இந்த பேரணி மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.