பலாலியிலிருந்து இந்திய விமானங்கள் சேவை 

பலாலியிலிருந்து சேவைகளை முன்னெடுக்க 2 இந்திய விமான சேவை நிறுவனங்கள் விருப்பம்

by Staff Writer 23-08-2019 | 4:49 PM
Colombo (News 1st) பலாலி விமான நிலையத்திலிருந்து சேவைகளை முன்னெடுக்க இரண்டு இந்திய விமான சேவை நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் அவை சேவையில் ஈடுபட முனைப்புக் காட்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனிடையே, பலாலியிலிருந்து தமது நிறுவனமும் சேவையில் ஈடுபடுமென ஸ்ரீலங்கா விமான நிறுவனத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். 80 இருக்கைகளைக் கொண்ட விமானங்களே இங்கு சேவையில் ஈடுபட முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.