எல்ல வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

எல்ல வனப்பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

by Bella Dalima 23-08-2019 | 3:41 PM
Colombo (News 1st) பதுளை - எல்ல மலைக்காட்டுப் பகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் E.LM. உதயகுமார தெரிவித்தார். எல்ல மலைப்பகுதியில் பரவிய தீ காரணமாக 200 ஹெக்டேயருக்கும் மேற்பட்ட வனப்பகுதி முற்றாக தீக்கிரையாகியுள்ளது. தீ பரவலால் பாறையொன்று எல்ல - வெல்லவாய வீதியில் வீழும் அபாயம் உருவாகியுள்ளது. எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் 24 ஆம் மைல்கல் அருகாமையில் சிறிய கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இதனால் எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் ஒருவழி போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளை கவனம் செலுத்துமாறு பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் E.M.L. உதயகுமார அறிவுறுத்தியுள்ளார். எல்ல மலைப்பகுதியில் நேற்று (22) மாலை முதல் பரவிய தீயை கட்டுப்படுத்த இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

ஏனைய செய்திகள்