கொள்கை வட்டி வீதத்தை மீண்டும் குறைத்தது மத்திய வங்கி

கொள்கை வட்டி வீதத்தை மீண்டும் குறைத்தது மத்திய வங்கி

கொள்கை வட்டி வீதத்தை மீண்டும் குறைத்தது மத்திய வங்கி

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2019 | 4:07 pm

Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கி தமது கொள்கை வட்டி வீதத்தை மீண்டும் குறைத்துள்ளது.

நேற்று (22) கூடிய நிதிச்சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க ஏனைய வங்கிகளுக்கு கடன்களை வழங்கும் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

9 வீதமாகக் காணப்பட்ட கொள்கை வட்டி வீதம் 8 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நிலையான வைப்பு வீதம் 8 வீதத்தில் இருந்து 7 வீதமாகக் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் நிலையாகப் பேண வேண்டிய இருப்பு விகிதத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்