கஞ்சிப்பானை இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை

கஞ்சிப்பானை இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை

கஞ்சிப்பானை இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2019 | 3:21 pm

Colombo (News 1st) பாதாள உலகக்குழு உறுப்பினரான கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி மாளிகாவத்தை பகுதியில் 5 கிலோ 300 கிராம் கஞ்சாவை வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டமை ஆகிய இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கஞ்சிப்பானை இம்ரானுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்ததுடன், நீதவான் கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டுக்களை கஞ்சிப்பானை இம்ரான் ஏற்றுக்கொள்வதாக பிரதிவாதி சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கிணங்க, ஒரு குற்றச்சாட்டிற்கு மூன்று வருடங்கள் என்ற அடிப்படையில், 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்