இருவேறு விபத்துகளில் இருவர் பலி

இருவேறு விபத்துகளில் இருவர் பலி

இருவேறு விபத்துகளில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2019 | 3:48 pm

Colombo (News 1st) சிகிரியா மற்றும் கரன்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

தம்புள்ளை – ஹபரண வீதியில் சிகிரியா திகம்பத்தஹா பகுதியில் வேன் ஒன்று பஸ்ஸூடன் மோதி விபத்திற்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் தம்புள்ளை மற்றும் ஹபரண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எல்பிட்டிய – அம்பலாங்கொட கரன்தெனிய பகுதியில் மோட்டார் சைக்கிளில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் 33 மற்றும் 27 வயதான பெலகஸ்வத்த மற்றும் சினிகொட பகுதியை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்