இந்தியன் 2 படத்திலிருந்து விலகிய நடிகை

இந்தியன் 2 படத்திலிருந்து விலகிய நடிகை

இந்தியன் 2 படத்திலிருந்து விலகிய நடிகை

எழுத்தாளர் Bella Dalima

23 Aug, 2019 | 5:53 pm

கமல் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலிருந்து பிரபல நடிகை விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்தியன் 2, தொடங்கிய வேகத்திலேயே பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ள படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தியன் முதல் பாகத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதில் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் இப்படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்