அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் பொய் பிரசாரம்: கோட்டாபய விளக்கம்

அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் பொய் பிரசாரம்: கோட்டாபய விளக்கம்

எழுத்தாளர் Bella Dalima

23 Aug, 2019 | 8:17 pm

Colombo (News 1st) அமெரிக்க பிரஜாவுரிமையை தான் சட்டப்பூர்வமாக நீக்கிக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறினார்.

தான் இன்னும் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்ளவில்லை என பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய கோட்டாபய ராஜபக்ஸ, அதனை நீக்கிக் கொண்டமைக்கான ஆவணத்தை இவ்வருடம் ஏப்ரல் 17 ஆம் திகதி அமெரிக்க தூதரகம் தனக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அந்த சான்றிதழை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு ஒப்படைத்துவிட்டதாகவும் எவ்வித பிரச்சினையும் இன்றி சட்டப்பூர்வமாக அவ்விடயத்தைக் கையாண்டுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்