25 சதவீத கல்லீரலுடன் வாழும் அமிதாப் பச்சன்

25 சதவீத கல்லீரலுடன் வாழும் அமிதாப் பச்சன்

by Chandrasekaram Chandravadani 22-08-2019 | 3:38 PM
தனுது 75 சதவீதமான கல்லீரல் கெட்டுவிட்டதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.   தவறான இரத்தம் செலுத்தப்பட்டதால் கல்லீரலில் 75 வீதமளவில் பாதிக்கப்பட்ட விடயம் அவருக்கு சுமார் 20 வருடங்களின் பின்னரே தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 1982ஆம் ஆண்டு மண்ணீரல் நோயால் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சனுக்கு ஏற்றப்பட்ட குருதியின் ஒருபகுதியில் Hepatitis B என்ற வைரஸ் இருந்ததால், அவருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.   அனைவரும் உடல் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என அமிதாப் பச்சன் வலியுறுத்தியுள்ளார்.