மருத்துவர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் நோயாளர்கள் அசௌகரியம்

by Staff Writer 22-08-2019 | 8:49 PM
Colombo (News 1st) நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். மருத்துவக் கல்லூரியின் ஆகக்குறைந்த தரத்தை சட்டமாக்காமை, உத்தேச தர சான்றிதழ் மற்றும் தர ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக மருத்துவ சபையை செயற்திறன் அற்றதாக மாற்றுகின்றமை உள்ளிட்ட 8 காரணங்களை முன்வைத்து இன்று காலை 8 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. நாளை காலை 8 மணி வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பு தொடரவுள்ளது. தாய் சேய் வைத்தியசாலைகள், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, சிறுநீரக சிகிச்சை பிரிவு மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவில்லை. அரச வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவுகளின் சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளுக்கு சென்ற நோயாளர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.